மக்கள் சேவைக்கான எங்கள் பயணம்

மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம். எங்களுடன் இணைந்து பணியாற்ற எங்கள் WhatsApp குழுவில் இன்றே இணைந்திடுங்கள்.

இணைக
மு.க. ஸ்டாலின்

உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

ஒரு சாதாரண கூட்டம் நடத்த சொன்னால் மாநாடு போல நடத்துவதுதான் அண்ணன் செந்தில்பாலாஜி அவர்கள். ஒவ்வொரு முறையும் அழுத்தமாக நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்

உதயநிதி ஸ்டாலின்

தற்போதைய தகவல்கள்

தமிழக அரசியலின் ஆகச்சிறந்த வியூக வகுப்பாளர் மாண்புமிகு V செந்தில்பாலாஜி அவர்கள்


தமிழக அரசியலில் "நிர்வாகத் திறமைக்கும், தேர்தல் கள வியூகத்திற்கும்" ஒரு இலக்கணமாகத் திகழ்பவர் திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள். கரூர் மண்ணின் மைந்தனாகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி, இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் அவரது பயணம், உழைப்பு மற்றும் மக்கள் செல்வாக்கின் சாட்சியாக உள்ளது.

“அரசியல் மேலாண்மை மற்றும் தேர்தல் வியூகம்”

அரசியல் களத்தை நுணுக்கமாகக் கையாளுவதில் அவர் ஒரு “சாணக்கியர்”.

  • பூத் மட்டத்திலான கட்டமைப்பு: ஒவ்வொரு தேர்தலிலும் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் தேர்தல் பணிகளைத் திட்டமிடுவதில் அவர் கைதேர்ந்தவர்.
  • கொங்கு மண்டலத்தின் முகவரி: கொங்கு மண்டலத்தில் திமுகவை அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது இவரின் மிக முக்கிய அரசியல் சாதனையாகும். மற்ற கட்சிகளில் இருந்த செல்வாக்குள்ள நிர்வாகிகளை திமுக-வில் இணைத்து, கட்சியின் பலத்தைப் பன்மடங்கு உயர்த்தினார்.

The Unstoppable Journey

வெற்றிப் பயணம்
01
Phase 012006

முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்

2006 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட V செந்தில்பாலாஜி அவர்கள், மக்கள் சேவையை மையமாகக் கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

02
Phase 022011 – 2015

போக்குவரத்து துறை அமைச்சர்

2011ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அரசு பேருந்து சேவைகள் மேம்பாடு மற்றும் கிராமப்புற இணைப்புகளை வலுப்படுத்தும் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

03
Phase 032018

மூன்றாவது முறை சட்டமன்ற உறுப்பினர் - திமுக மாவட்டச் செயலாளர்

2016ஆம் ஆண்டு, மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு கரூர் திமுக மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்தும் முக்கியப் பணியினை ஏற்றார்.

04
Phase 042019

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வெற்றி

2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, மக்களின் தேவைகளை உணர்ந்து, மக்களுக்கான பணிகளை முன்னெடுத்து, மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

05
Phase 052021

தொடர்ந்து ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் - மாபெரும் வெற்றி

2021ஆம் ஆண்டு, ஐந்தாவது முறையாக மக்கள் மன்றத்தில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2 லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள் உள்ளிட்ட மின்சாரத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

06
Phase 062021 – 2023

மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வு அமைச்சர்

அமைச்சராக, மின் விநியோக மேம்பாடு, மின்தடை குறைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் ஆற்றல் கட்டமைப்பை வலுப்படுத்தினார்.

2.0L+
இலவச விவசாய மின் இணைப்புகள்
50%
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு
24/7
மின் நுகர்வோர் சேவை மையம்
77.5K+
நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம்

V Senthilbalaji Fans Club - சமூக ஊடகப் பக்கங்கள்

V Senthilbalaji அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கம்