கரூர், கலைஞர் அறிவாலயம் 08 Sept 2026

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், கழக இளைஞரணிச் செயலாளரும், இளம் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட கழகச் செயலாளரும், மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை கழகத்தின் சார்பில் பிரதிநிதிகளாக திரு. தி.அ. முகம்மது சகி மற்றும் திரு. பெரம்பலூர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடத்தினர்.

கூட்டத்தில் கழகத்தின் எதிர்கால செயல்பாடுகள், கட்சி அமைப்பு ரீதியான பணிகள், வரவிருக்கும் அரசியல் மற்றும் கழக நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கழகத்தின் கொள்கைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் மக்கள் நலப் பணிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

கழகத்தின் ஒற்றுமையையும் கட்டமைப்பையும் மேலும் வலுப்படுத்தி, தலைமை கழகத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாண்புமிகு V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது | V Senthil Balaji Fans Club