காந்திபுரம் VKK சாலை, கோவை17 Apr 2026

கோவை தெற்கில் உற்சாக அலை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம்தலைவர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள்

மாநில வளர்ச்சி திட்டங்களில் ‘Trendsetter’ ஆக திகழும் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர்களின் எழுச்சி நாயகருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


கோவை காந்திபுரம் VKK சாலையில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியின் வெற்றி வேட்பாளரான . V.செந்தில்பாலாஜி அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் உற்சாகமாக வாக்கு கோரினார்.


இந்த நிகழ்வில் பேசிய அவர், தமிழ்நாட்டின் சமூகநீதியும், சமத்துவ வளர்ச்சியும் தொடர்ந்து நிலைத்திருக்க, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வெற்றி பெற வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். மேலும், மகளிர் முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்து, கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.


நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக்கட்சிகளின் நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.


கோவை தெற்கில் நடைபெற்ற இந்த பிரச்சார நிகழ்வு, தேர்தல் களத்தில் கழக நிர்வாகிகளுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் மேலும் வலுவூட்டும் வகையிலும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கோவை தெற்கில் உற்சாக அலை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம்தலைவர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள் | V Senthil Balaji Fans Club